search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கீதம்"

    தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #PMModi #NationalAnthem
    சென்னை:

    தமிழகத்தில் மதுரை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி வேம்பு என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.



    அவர் தனது மனுவில், பிரதமர் பங்கேற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படாதது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பிரதமர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். #PMModi #NationalAnthem
    கர்நாடக சட்டசபையில் இன்று எடியூரப்பா ராஜிமாமா செய்த பின்னர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியேறியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #nationalanthem #rahulgandhi #karnatakaassembly
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர், அவையை விட்டு அவர் வேகமாக வெளியேறியதும், சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒப்படைப்பதாக தற்காலிக சபாநாயகர் போபையா அறிவித்தார். 

    அப்போது, வழக்கமாக இசைக்கப்படும் தேசிய கீதம் ஒலிபரப்பானது. சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நின்றிருந்தனர். ஆனால், பலர் அவசரமாக வெளியே செல்வதில் குறியாக இருந்தனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியேறியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குவதை பிரதமர் மோடி நேரடியாக ஆதரித்ததை மக்கள் பார்த்தனர்.


    எனவே, நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் பேசி வருவது அப்பட்டமான பொய் என்பதும் அவரே ஊழல்வாதி என்பதும் தெளிவாக புரிகிறது. பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

    கர்நாடக சட்டசபையில் இன்று அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பின்னர் எம்.எல்.ஏ.க்களும், தற்காலிக சபாநாயகரும் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியே சென்றதை கவனித்தீர்களா? ஆட்சி, அதிகாரத்தில் இருந்தால் அரசின் எந்த அமைப்பையும் அவமரியாதைப்படுத்த இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பது தெரிகிறது’ என குறிப்பிட்டுள்ளார். #nationalanthem #rahulgandhi #karnatakaassembly 
    ×